கிழக்கில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்

Ampara Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jan 20, 2025 01:45 PM GMT
Rakshana MA

Rakshana MA

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும் நேற்று(20) தலைவர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி எச்.எம்.ஏ.ஜி.திலகரட்ன, தொழிற் சங்கங்கள் தான் சார்ந்த திணைக்களத்தின் வளர்ச்சிக்கும் அதன் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தபால் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஆகியோர் பல சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றார்கள்.

அமெரிக்காவில் டிக்டொக் தடை நீக்கம்! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டிக்டொக்

அமெரிக்காவில் டிக்டொக் தடை நீக்கம்! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டிக்டொக்

முன்மாதிரி சங்கம் 

எனது சேவை காலத்திலும் தபால் திணைக்களத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தொழிற் சங்கங்கள் எப்போதும் முற்போக்குத் தன்மையுடன் இயங்கினால் தான் ஒரு வலுவான தொழிற் சங்கமாக இயங்க முடியும் தொழிற் சங்கங்கள் வெறுமனே போராட்டங்களையும் வேறு விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமானால் அவை ஒரு வலுவான சங்கமாக அமையாது.

கிழக்கில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம் | Annual General Meeting Of Postal Department

எப்போதும் நல்லவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு தீயவைகளுக்கு எதிர்த்து போராட வேண்டும். அந்த வகையில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் ஒரு முன்மாதிரியாக செயற்படுவதையிட்டு நான் பாராட்டுகின்றேன்.

அஞ்சல் திணைக்களத்திற்கு இத் தொழிற் சங்கம் ஒரு வழிகாட்டியாக செயற்படும் என்பதில் ஐயமில்லை என சுட்டிக்காட்டினார்.

காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து விபத்து : 14 பேர் காயம்

காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து விபத்து : 14 பேர் காயம்

நடைபெற்ற வைபவம்

மத அனுஸ்டானத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், மறைந்த அங்கத்தினர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் வரவேற்புரை எம்.சி.எம். இர்பானினால் ஆரம்பிக்கப்பட்டதுடன், வருடாந்த பொதுக்கூட்ட அறிக்கையை பொதுச் செயலாளர் எம்.ஜே.எம் சல்மான் மேற்கொண்டு வருடாந்த அறிக்கை மற்றும் தீர்மானங்களை அறிவித்தார்.

இதனை தொடர்ந்து வருடாந்த கணக்கறிக்கை பொருளாளர் யு.துஷானினால் சமர்ப்பிக்கப்பட்டது.

கிழக்கில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம் | Annual General Meeting Of Postal Department

பின்னர் நடப்பு வருடங்களுக்கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டதுடன் சங்கத்தின் UPDO NEWS எனும் செய்தி மடலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும், அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன் பாடல்கள், கௌரவிப்பு, நன்றியுரை என நிகழ்வுகளும் நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்தும் இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, அம்பாறை அஞ்சல் அத்தியட்சகர் பிரிவிலுள்ள தபால் அதிபர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி எச்.எம்.ஏ.ஜி.திலகரட்ன கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஜெகன், மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சி நிறுவக பிரதம போதனாசிரியர் பி.நரேந்திரனும், விசேட அதிதியாக இலங்கை சுதந்திர தபால் தொழில்வல்லுனர்கள் சங்க பொதுச் செயலாளர் மஞ்சுள பெர்ணான்டோ, அகில இலங்கை தமிழ்பேசும் அஞ்சல் ஊழியர்கள் சங்க முன்னளர் தலைவர் எஸ்.சிவநேசராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்..

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்..

பொத்துவிலில் காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

பொத்துவிலில் காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery