காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து விபத்து : 14 பேர் காயம்

Batticaloa Colombo Trincomalee Sri Lankan Peoples Accident
By Rakshana MA Jan 20, 2025 06:06 AM GMT
Rakshana MA

Rakshana MA

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது,  சேருநுவர - கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

மேலும்,  இந்த விபத்தில் சுமார் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலையின் 2 ஆவது ஆண்டு நிறைவு விழா

சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலையின் 2 ஆவது ஆண்டு நிறைவு விழா

விபத்து சம்பவம் 

இந்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விபத்தில் காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து விபத்து : 14 பேர் காயம் | Bus Accident From Kathankudi 14 Injured

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பாண் விலை குறைப்பு! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பாண் விலை குறைப்பு! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery