அமெரிக்காவில் டிக்டொக் தடை நீக்கம்! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டிக்டொக்

United States of America TikTok World Social Media
By Rakshana MA Jan 20, 2025 09:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

டிக் டொக் (TikTok) செயலி அமெரிக்க பயனர்களுக்கு அதன் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

குறித்த செய்தியானது, அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ட்ரம்ப் பதவியேற்ற பின் குறுகிய வீடியோ பகிர்வு பயன்பாட்டுக்காக மீண்டும் ஒன்லைனில் அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வைத்தியசாலை உதவியாளர்களை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கத் தீர்மானம்! வெளியாகியுள்ள தகவல்

வைத்தியசாலை உதவியாளர்களை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கத் தீர்மானம்! வெளியாகியுள்ள தகவல்

17 கோடி கணக்குகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேசியப் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்யும் சட்டத்தை இயற்றினார்.

அமெரிக்காவில் டிக்டொக் தடை நீக்கம்! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டிக்டொக் | Tik Tok Unbanned In The United States 2025

அவ்வாறு விற்பனை செய்யத் தவறினால், டிக்டொக் செயலியை அப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க உத்தரவிடப்படும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்குக் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில், நேற்று (19) முதல் குறித்த செயலிக்கான தடை நடைமுறைக்கு வந்தது.

இதனையடுத்து, டிக்டொக் நிறுவனம் தற்காலிகமாக அதன் சேவையை நிறுத்துவதாக அறிவித்தது.

காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு

காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு

ஜனாதிபதியாகப் பதவியேற்பு

இதன்படி அப்பிள் ஐ ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டொக் செயலி நீக்கப்பட்டது.

அமெரிக்காவில் டிக்டொக் தடை நீக்கம்! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டிக்டொக் | Tik Tok Unbanned In The United States 2025

இந்தநிலையிலேயே, அமெரிக்காவில் டிக்டொக் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

இன்று அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக உறுதியளித்ததையடுத்து, சேவையை மீண்டும் தொடங்குவதாக டிக்டொக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  

இஸ்லாமிய முறைப்படி வழங்கப்பட்ட தண்டனை : வாழைச்சேனையில் ஆறு பேர் கைது

இஸ்லாமிய முறைப்படி வழங்கப்பட்ட தண்டனை : வாழைச்சேனையில் ஆறு பேர் கைது

மின் கட்டண திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW