வானத்தின் கதவுகளை திறந்திடும் கலிமா
ஹஜ்ரத் அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, ஓர் அடியான் லாஇலாஹ இல்லல்லாஹ் கூறினால் அவருக்காக வானங்களின் கதவுகள் திறக்கப்பட்டு அந்த கலிமா அர்ஷ் வரை போய் சேர்ந்துவிடுகிறது, ஆனால் ஒரு நிபந்தனை, அவர் பெரும்பாவங்களை விட்டும் நீங்கி இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்.
விளக்கம்
இந்த கலிமா நேராக அர்ஷ் வரை போய் சேருகிறது என்பது எந்தளவு பெரிய சிறப்பிற்குரியதாகவும் ஏற்றுக்கொள்ள தகுந்ததாகவும் இருக்கிறது.
மேலும் பெரும்பாவங்களுடன் இக்கலிமாவை கூறினாலும் பலன் கிடைக்கவே செய்யும்.

அல்லாமா முல்லா அலீ காரீ(ரஹ்) அவர்கள் கூறுவதாவது, பெரும் பாவங்களை விட்டு நீங்கி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது, விரைவாக ஏற்கப்படுவதற்கும், வானுலக கதவுகள் திறக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது என்பதற்கே.
அவ்வாறில்லையானால் பெரும்பாவங்களுடன் கலிமா ஏற்றுக்கொள்ளப்படும் நன்மையும் கிடைக்கும்.
உலமாக்களில் வேறு சிலர் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறும் பொழுது
”கலிமாவை கூறியவர் இறந்த பின்னால் அவருடைய ரூஹைக் கௌரவிக்கும் பொருட்டு வானுலகத்தின் கதவுகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்கள்.
இரண்டு கலிமாக்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கு அர்ஷீக்கு கீழ் எவ்வித தடையும் கிடையாது.
இரண்டாவது வானம் பூமி ஆகியவற்றை(தன் ஒளியினால், நன்மையினால்) நிரப்பி விடுகிறது.
ஒன்று லாஇலாஹ இல்லல்லாஹ், மற்றொன்று அல்லாஹு அக்பர் என ஒரு ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.