ஜனாதிபதிக்கு எதிராக சபாநாயகரிடம் கடிதம் கையளித்த சஜித்!

Anura Kumara Dissanayaka Sajith Premadasa President of Sri lanka Disaster
By Fathima Dec 19, 2025 05:41 AM GMT
Fathima

Fathima

இலங்கையில் டிட்வா புயலால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்வதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகள் இடம்பெறாமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்குமாறு கோரும் கடிதம் சபாநாயகரிடம் நேற்று(18.12.2025) கையளிக்கப்பட்டுள்ளது.

கடிதம் 

எதிரணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக சபாநாயகரிடம் கடிதம் கையளித்த சஜித்! | Anura Failed Prevent Disaster Sajith Allegation

அதனை சபாநாயகரிடம் கையளிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிரணி எம்.பிக்களையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார்.

சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:- "டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக இன்னும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும், நாட்டில் நடந்துள்ள அனர்த்தங்களில் இந்தப் பேரனர்த்தம் பேரிழிவை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகின்றது.

இந்தத் துயர் மிகுந்த நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்திருந்தன.

முன்னறிவிப்புகளைச் செய்திருந்தன என்பது ஏற்கனவே நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், இந்த நிலைமைக்கு முகம்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் எந்த வகையிலும் முன்னாயத்தமின்றி இருந்தமை கவலைக்குரிய விடயமாகும்.

முன்னாயத்த தயார் நிலை எடுக்கப்பட்டிருந்தால், ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறிப்பிட்டளவில் தடுத்திருக்க முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.

பொருளாதார நெருக்கடி

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவை இடம்பெற்ற போது விசேட தெரிவுக் குழுக்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

ஜனாதிபதிக்கு எதிராக சபாநாயகரிடம் கடிதம் கையளித்த சஜித்! | Anura Failed Prevent Disaster Sajith Allegation

இதன்பிரகாரம் டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை பெறவேண்டும்.

இதற்காக நாடாளுமன்றம் விசேட தெரிவுக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்.

22 மாவட்டங்களில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதால் தெரிவுக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்." என்று மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.