நைஜீரியாவின் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: பலர் பலி

Nigeria Death World
By Fathima Dec 25, 2025 05:27 AM GMT
Fathima

Fathima

நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை

தலைநகரான மைதுகுரியின் கம்போரு சந்தையில் மாலை தொழுகையின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

நைஜீரியாவின் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: பலர் பலி | Bomb Blast At Mosque In Nigeria

தாக்குதலை நடத்தியதாக எந்தக் குழுவும் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை, மைதுகுரி நகரம், இஸ்லாமியக் குழுவான போகோ ஹராமின் மையமாக இருந்து வருகிறது.

போர்னோ மாநிலத்தில் ஒரு இஸ்லாமிய கலிபாவை உருவாக்குவதற்காக, போகோ ஹராம், 2009 இல் தமது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தது.