விசேட தொடருந்து சேவை தொடர்பான அறிவிப்பு

Christmas Train
By Fathima Dec 24, 2025 06:36 AM GMT
Fathima

Fathima

கிறிஸ்மஸ் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக தொடருந்து சேவை ஒன்றை ஈடுபடுத்த தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (24.12.2025) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி விசேட கடுகதி தொடருந்து ஒன்று பயணிக்கவுள்ளது.

விசேட தொடருந்து சேவை

அந்த விசேட தொடருந்து, இந்தமாதம் 29 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு மாத்தறை தொடருந்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டு, காலை 8.30 மணிக்குக் கொழும்பு கோட்டையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

விசேட தொடருந்து சேவை தொடர்பான அறிவிப்பு | Special Train Service For The Festive Season

மேலும், கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை இடையிலான நகரங்களுக்கிடையிலான தொடருந்து சேவை எதிர்வரும் 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த தொடருந்து 9 முதலாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளைக் கொண்டதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.