பெண் பௌத்த துறவியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவர் கைது
Sri Lanka
Sri Lankan Peoples
Buddhism
By Faarika Faizal
வத்தளையில் பெண் பௌத்த துறவி ஒருவரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை, கெரவலப்பிட்டியில் உள்ள ரத்தினாவலி கோயிலுக்கு அருகில் பெண் பௌத்த துறவி ஒருவரை வார்த்தைகளால் திட்டியதாகவும், மற்றும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் கூறி இரண்டு ஆண்கள் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைரலாகும் காணொளி
குறித்த சந்தேக நபர்கள் 58 மற்றும் 67 வயதுடைய வத்தளையைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், நேற்று(02.11.2025) இரவு நடந்த இந்த சம்பவம் காணொளியில் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், குறித்த இரு சந்தேக நபர்களும் இன்று(03.11.2025) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.
[O0RWXV6}
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |