முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அணிவது பிரச்சினை: ஞானசார தேரர்
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (28.10.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "வைத்தியசாலைகளில் முஸ்லிம் தாதியர்கள் கலாசார ஆடையணிவது தற்போதைய பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. நிகாப் ஆடைக்கு இன்று அனுமதிக் கொடுத்தால் எதிர்காலத்தில் புர்காவுக்கும் அனுமதிக்கு கொடுக்கும் நிலை ஏற்படும்.
முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைக்கு எதிர்ப்பு
அந்நிலையில், அன்று முஸ்லிம் மாணவிகள் பாடசாலைக்கு ஹிஜாப் வகையிலான சீறுடை அணிய அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச காலத்தில் நாடாளுமன்றத்துக்கு தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டு வந்தார்.சுற்றறிக்கை ஊடாக அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொது இடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதியளித்தால் அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் அடிபணிய கூடாது.
மேலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பிரதான சூத்திரதாரியை கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றும் தேடிக் கொண்டிருக்கிறார். சூத்திரதாரியை தேடுவதற்கு மாத்திரமே அவதானம் செலுத்தப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் அதனுடன் இணைந்த விடயங்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை." என்றும் கூறினார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |