இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஷபியாவுக்கு ஞானசார தேரர் வாழ்த்து

Sri Lanka Bodu Bala Sena Sports
By Faarika Faizal Oct 30, 2025 03:06 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனையான பாத்திமா ஷபியா யாமிக் பற்றி மாறுப்பட்ட பல விடயங்களை பதிவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தங்க மகள்! வீராங்கனை பாத்திமா ஷாஃபியா கூறும் செய்தி

இலங்கையின் தங்க மகள்! வீராங்கனை பாத்திமா ஷாஃபியா கூறும் செய்தி

மேலும் அவர் தெரிவிக்கையில், "தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனையான பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு மாநாயக்க தேரர்கள் சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஷபியாவுக்கு ஞானசார தேரர் வாழ்த்து | Galagoda Aththe Gnanasara

அத்துடன், இவர் இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.சர்வதேச மட்டத்தில் மென்மேலும் வெற்றிப் பெறுவதற்கு அவரை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்விடயத்தின் இனத்தை முன்னிலைப்படுத்தி செயற்படக்கூடாது.

இந்நிலையில், வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக் பற்றி சமூக ஊடகங்களில் பலர் மாறுப்பட்ட பல விடயங்களை பதிவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. அனைத்து விடயங்களிலும் மதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட முடியாது." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

You May Like This Video...

 

இளம் முஸ்லிம் வீராங்கனை குறித்து வெளியாகும் கருத்துக்கள்: அஷ்ஷெய்க் அர்கம் நூராமிதின் விளக்கம்

இளம் முஸ்லிம் வீராங்கனை குறித்து வெளியாகும் கருத்துக்கள்: அஷ்ஷெய்க் அர்கம் நூராமிதின் விளக்கம்

தெற்காசிய தடகளத்தில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு

தெற்காசிய தடகளத்தில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW