வாகன இறக்குமதிக்கு அனுமதி: வெளியான தகவல்

Ministry of Finance Sri Lanka Sri Lanka Government Economy of Sri Lanka vehicle imports sri lanka
By Laksi Nov 29, 2024 07:08 AM GMT
Laksi

Laksi

வாகன இறக்குமதி மீண்டும் அனுமதிக்கப்படும் போது முதல் கட்டமாக பேருந்துகள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அனுமதி நிதி அமைச்சினால் வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக இலங்கை வாகன இறக்குதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே (Indika Sampath Merenchige) தெரிவித்துள்ளார். 

அம்பாறையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து துக்க தினம் அனுஷ்டிப்பு

அம்பாறையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து துக்க தினம் அனுஷ்டிப்பு

கார்கள் இறக்குமதி 

வாகன இறக்குமதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் கார்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும் இந்த நடவடிக்கை அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

வாகன இறக்குமதிக்கு அனுமதி: வெளியான தகவல் | Vehicle Imports Sri Lanka

அத்துடன் பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைக்கும்.

மேலும் அந்நிய செலாவணியையும் சேமிக்க முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே சுட்டிக்காட்டினார்.

வடக்கு- கிழக்கில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்

வடக்கு- கிழக்கில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்

பொத்துவிலில் முதலையிடம் சிக்கிய நபர்: தேடும் பணி தீவிரம்

பொத்துவிலில் முதலையிடம் சிக்கிய நபர்: தேடும் பணி தீவிரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW