வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்பட்டுள்ள 1500 பொலிஸார்

Sri Lanka Police Vavuniya Northern Province of Sri Lanka
By Laksi Sep 16, 2024 11:56 AM GMT
Laksi

Laksi

வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத் சந்திர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக்கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பாடசாலை சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக முறைப்பாடு

மட்டக்களப்பில் பாடசாலை சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக முறைப்பாடு

தேர்தலுக்கான ஏற்பாடு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள்,பொலிஸார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்பட்டுள்ள 1500 பொலிஸார் | Vavuniya District Election Arrangement

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 12 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மத்திய நிலையமாக வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி செயற்படவுள்ளதுடன், அதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத் சந்திர தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது

யுக்திய நடவடிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW