யுக்திய நடவடிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Mayuri Sep 16, 2024 08:58 AM GMT

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 668 ஆண்களும் 5 பெண்களையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்

அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து 369 கிராம் 528 மில்லி கிராம் ஹெரோயின், 175 கிராம் 31 மில்லி கிராம் ஐஸ், 618 போதை மாத்திரைகள் மற்றும் 96,055 கிராம் 78 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

யுக்திய நடவடிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது | Yukthiya Operation Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW