24 மணித்தியாலத்திற்குள் மகிந்தவை கைது செய்யலாம் - தண்டனை குறித்து பொன்சேகா அதிரடி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சட்டரீதியான தண்டனை வழங்கப்படாவிட்டால், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியுள்ளதாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உட்பட இந்த அரசாங்கம் எவ்வளவு சாதனைகளைப் பற்றி பேசினாலும், மகிந்த ராஜபக்சவுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாட்டை சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளதாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
மேலும் அவர், “மக்களுக்கு சேவை செய்வது அரசாங்கத்தின் கடமை. அந்தக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் நாளில்தான் நாம் அதனை ஏற்றுக்கொள்வோம். இதுவே யதார்த்தம்; இதுவே உண்மை. நாம் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் உண்மையைப் பேச அஞ்சமாட்டோம்” எனக் குறிப்பிட்டார்.
நாங்கள் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், உண்மையைப் பேச நாங்கள் அஞ்ச மாட்டோம். 24 மணி நேரத்திற்குள் மகிந்த ராஜபக்சவைக் கைது செய்யலாம். மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை, அவர் தூக்கிலிடப்படுவதுதான் என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.