மட்டக்களப்பில் பாடசாலை சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக முறைப்பாடு
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை சம்பவங்கள்
மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் காண்காணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் நேற்று (15) இடம்பெற்றபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஒன்று வரும் போது சமாதானமான தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டும் என்பதற்காக தேர்தல் நடாத்துவதற்கு முன்னர் மாவட்ட இணைப்பாளர்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு சமாதான தேர்தலை செய்ய முடியாது.
பிரதேசங்கள் மற்றும் எந்த எந்த இடங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என பதிவுகளை செய்வது வழமை
இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர், ஒட்டுமாவடி பிரதேசங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என்கின்ற சூழ்நிலை இருந்தபோதிலும் இதுவரை எந்தவொரு பாரிய வன்முறைகள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |