இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் பதவியேற்பு
இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) பிற்பகல் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணிலிடமிருந்து நியமனக் கடிதத்தை வடிவேல் சுரேஷ் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி
அத்தோடு, வடிவேல் சுரேஷ் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ,அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |