சஜித் தொடர்பில் பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்: இம்ரான் மகரூப்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa
By Laksi Aug 21, 2024 08:28 AM GMT
Laksi

Laksi

நாடு நிர்க்கதியாக இருந்தபோது சஜித் பிரேமதாச அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் அப்பட்டமானது என  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, உண்மையில் நடந்தது அதுவல்ல, இன்னும் பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சஜித் பிரேமதாஸவிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க அச்சம் கொண்டிருந்த கோட்டாபயவும், ராஜபக்சர்களும் தங்களை காப்பாற்றிக் கொள்ள ரணிலை தேர்தந்தெடுத்தனர். சஜித் மீது இருந்த பயமே அவர்களின் இந்த தீர்மானத்திற்கு காரணம் என்றும் இம்ரான் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

ஹரீஸுடம் விளக்கம் கோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஹரீஸுடம் விளக்கம் கோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கோட்டபாயவின் பதவி விலகல்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து திருகோணமலை, குச்சவெளி பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சஜித் தொடர்பில் பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்: இம்ரான் மகரூப் | Sajith Support For Imran Maharoof

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் ராஜபக்சர்களை குற்றவாளிகளாக இணங்கண்டு அவர்களை வீட்டுக்கு அனுப்ப முற்பற்றனர். இந்த நிலையில் குழப்பமடைந்த ராஜபக்சாக்கள் அரசாங்கத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை. தப்பியோடவும் முடியவில்லை.

இதனாலேயே தங்களை காப்பாற்றிக்கொள்ள முதலில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கினர். பின்னர், கோட்டாவுக்கு இதற்கு மேலும் தாக்குபிடிக்க முடியவில்லை என்பதனால் அவர் தப்பியோடினார். அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு கூறியபோது நாம் கோட்டபாயவின் பதவி விலகல் உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்தோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இஷாக் ரஹ்மான்

ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இஷாக் ரஹ்மான்

சஜித் பிரேமதாச

ஆனால் உண்மையில் அவர்களே தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரு காவலனை தெரிவு செய்து கொண்டே எமக்கு அழைப்பு விடுப்பது போன்று நாடகமாடினர். அந்த காவலன் ராஜபக்சக்களை பாதுகாத்து நாட்டை விட்டு தப்பி செல்லவிருந்த ராஜபக்சக்களை தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கொண்டு வந்துள்ளார்.

சஜித் தொடர்பில் பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்: இம்ரான் மகரூப் | Sajith Support For Imran Maharoof

அந்த நேரத்தில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கி இருந்தால் இன்று ராஜபக்சக்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.

சஜித் பிரேமதாச நாட்டை இக்கட்டான நிலையில் பாரம் எடுக்கவில்லை என்பது ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்சக்களும் சேர்ந்து ஆடிய அரசியல் நாடகம். இது வெறும் அரசியல் குற்றச்சாட்டுதான். ஆகவே இதனை யாரும் நம்புவதாக இல்லை என இம்ரான் மகரூப் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW