ஜனாதிபதியால் மௌலானா எம்.பிக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பதவி
Batticaloa
Srilanka Muslim Congress
Ranil Wickremesinghe
By Laksi
அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவிப்பிரமாணம் இன்று (21) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலுக்கு ஆதரவு
இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
இந்தநிலையில், அலிசாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட்டிற்கான நிதி இடைநிறுத்தம்: முஷாரப்புக்கு நிதி வழங்க நடவடிக்கை - சஜித் எழுப்பியுள்ள பகிரங்க கேள்வி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |