ஜனாஸா எரிப்பு விவகாரம்: ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கோரிக்கை

Dr Ramesh Pathirana Sri Lanka Ministry of Health Sri Lanka
By Laksi Aug 21, 2024 09:49 AM GMT
Laksi

Laksi

கோவிட் ஜனாஸா எரிப்பு தொடர்பில் சுகாதார அமைச்சில் உள்ள பிரதான தொற்று நோய் நிபுணரை கொண்டு விசாரணை குழு ஒன்றை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நா்டாளுமன்றில் இன்றைய தினம் (21) இடம்பெற்ற உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சஜித் தொடர்பில் பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்: இம்ரான் மகரூப்

சஜித் தொடர்பில் பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்: இம்ரான் மகரூப்

ஜனாஸா எரிப்பு

இது குறித்து ரவூப் ஹக்கீம் மேலும் கருத்து தெரிவிக்கையில், முறையற்ற ரீதியில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டிருந்தது. அதற்காக அரசாங்கம் மன்னிப்பு கேட்டிருந்தது. அதனை பாராட்டுகின்றோம்.

ஜனாஸா எரிப்பு விவகாரம்: ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கோரிக்கை | Janaza Burning Hakeem Appeals To Health Minister

அதனால் எந்த ஒரு திணைக்கள ரீதியான விசாரணையும் இடம்பெறவில்லை. எந்த ஒரு ஆதாரமும் இல்லாத ஒரு பயங்கரமான தீர்மானம் எடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் தலதா அத்துகோரள

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் தலதா அத்துகோரள

விசாரணை குழு

ஆகவே முழு முஸ்லிம் சமுதாயமும் பயங்கரமாக பாதிக்கப்பட்டது. இது குறித்து நான் உங்களுக்கு ஒரு கடிதம் ஒன்று எழுதியிருக்கின்றேன்.

ஜனாஸா எரிப்பு விவகாரம்: ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கோரிக்கை | Janaza Burning Hakeem Appeals To Health Minister

சுகாதார அமைச்சில் உள்ள பிரதான தொற்று நோய் நிபுணரை கொண்டு குழு ஒன்றை அமைக்குமாறு நான் வேண்டிக்கொள்கிறேன்.

விஞ்ஞான முறையற்ற முறையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டது. இது முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW