நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் தலதா அத்துகோரள
ஐக்கியம க்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் .
இன்றைய தினம் நாடாளுமன்றில் அவர் இந்த பதவி விலகல் குறித்து அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல்
2004, 2010, 2015 மற்றும் 2020 ஆண்டுகளில் தலதா அத்துகோரள இரத்திரனபுரி மாவட்டத்தின் ஊடாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார்.
நீதி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை தலதா அத்துகோரள வகித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் காமினி அதுகோரளவின் சகோதரியான தலதா, அவரது சகோதரரனின் மறைவின் பின்னர் அரசியலில் பிரவேசித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு குழுக்களாக பிரிந்து செயற்படுவது தமது மனச்சாட்சியின் பிரகாரம் ஏற்புடையதல்ல எனக்கருதி இவ்வாறு பதவி விலகுவதாக தலதா அறிவித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென சிந்திக்காது எடுத்த தீர்மானம் எனவும் அது கட்சியின் அழிவிற்கு வழியமைத்தது எனவும் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |