உதுமாலெப்பை எம்.பி கட்சியையே அழிக்கிறார் : போர்க்கொடி தூக்கும் முஸ்லிம் காங்கிரஸ்

Srilanka Muslim Congress Rauf Hakeem Eastern Province Political Development Parliament Election 2024
By Rakshana MA Apr 17, 2025 11:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை 20 வருடங்களாக துன்புறுத்தி வந்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையை மீண்டும் கட்சியினுள் எடுத்துள்ளனர் என  அட்டாளைச்சேனை மத்திய குழுத் தலைவர் எஸ்.எல்.ஏ. ஹலீம்  குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவரை மன்னித்து கட்சிக்குள் எடுத்து, அவரை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக்கியுள்ளார்கள். அதன் பின்னரும், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு எதிரான அவரின் அட்டகாசங்களும் வன்முறைகளும் குறைவடையவில்லை.  

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து நடத்திய கூட்டமொன்றில் வைத்து  தன்னையும் கட்சியின் மூத்த போராளிகளையும் 'மடையன்' என்றும் 'நீ' என ஒற்றை வார்த்தையிலும் உதுமாலெப்பை பேசியதோடு, அந்த இடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு எதிராக வன்முறையைக் கையில் எடுத்ததார்.

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

கட்சிக்குள் பிளவு

இந்த விடயத்தை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு தான் தெரியப்படுத்தியுள்ளேன். "முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் காலத்தில் எமது கட்சியில் உதுமாலெப்பை இணைந்திருந்தார்.

தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமைப் பதவி ஏற்றவுடன் அதாஉல்லாவுடன் உதுமாலெப்பையும் கட்சியை விட்டு வெளியேறினார்.

உதுமாலெப்பை எம்.பி கட்சியையே அழிக்கிறார் : போர்க்கொடி தூக்கும் முஸ்லிம் காங்கிரஸ் | Uthumalebbe Mp Is Destroying The Party  

அதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் உதுமாலெப்பை செய்தார். குறிப்பாக அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் - முஸ்லிம் காங்கிரல் போராளிகளுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்தார்.

இது 20 வருடங்களுக்கும் மேலாக நடந்தது. இந்த நிலையில், தேசிய காங்கிரசில் உதுமாலெப்பை ஓரங்கட்டப்பட்டமையினால் அவர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார்.

கடந்த காலங்களில் அவர் எமது கட்சிக்குச் செய்த அட்டூழியங்களையெல்லாம் நாங்கள் மன்னித்து, அவரை சேர்த்துக் கொண்டோம்.

ஆனாலும், தற்போதுவரை அட்டாளைச்சேனையிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை ஓரங்கட்டுவதையும் அவர்களை அவமானப்படுத்துவதையும் உதுமாலெப்பை கைவிடவில்லை.

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

போராளிகளுக்கு முன்னுரிமை

கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட உதுமாலெப்பைக்கு கட்சியின் மத்திய குழு எனும் வகையில் நாம் முழுமையான ஆதரவை வழங்கி, அவரின் வெற்றிக்காக உழைத்தோம்.

ஆனால், அவரின் வன்முறையாாலும், அவரின் பொய் வழக்குகளாலும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளில் பலர், உதுமாலெப்பைக்கு மத்திய குழு ஆதரவளிக்கக் கூடாது என்று எங்களை வற்புறுத்தினார்கள்.

உதுமாலெப்பை எம்.பி கட்சியையே அழிக்கிறார் : போர்க்கொடி தூக்கும் முஸ்லிம் காங்கிரஸ் | Uthumalebbe Mp Is Destroying The Party

ஆனால், அதனையும் கடந்து உதுமாலெப்பைக்கு ஆதரவளித்து அவரை நாங்கள் எம்.பியாக்கினோம். இருந்தபோதும், மத்திய குழுவின் அந்த அர்ப்பணிப்பை கொச்சைப்படுத்தும் வகையில் உதுமாலெப்பை பேசியும், நடந்தும் வருகின்றார்.

முஸ்லிம் காங்கிரஸுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்த இந்தக் கட்சியின் மூத்த போராளிகளை ஓரங்கட்டிவிட்டு, தன்னுடன் தேசிய காங்கிரஸிலிருந்து வந்து முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தவர்களை முஸ்லிம் காங்கிரஸுக்குள் முதன்மைப்படுத்துவதற்கு உதுமாலெப்பை முயற்சிக்கின்றார்.

அவ்வாறான அநியாயத்தை கட்சிக்குள் செய்வதற்கு அனுமதிக்க முடியாது. எமது கட்சிக்காக செய்யும் தியாகங்களைக் கொண்டே, கட்சிக்குள்ளிருக்கும் போராளிகளுக்கான 'இடம்' தீர்மானிக்கப்படுகிறது.

எமது கட்சிக்காக சிறை வரை சென்று தியாகங்களைப் புரிந்த எமது போராளிகள் புறமொதுக்கப்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். எனவே, உதுமாலெப்பையின் இவ்வாறான விருப்பங்களுக்கு நாங்கள் தடையாக இருப்பதாக அவர் கருதுவதால், எங்கள் மீது அவர் கடுமையான காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கின்றார்.

இதன் காரணமாகவே, சில தினங்களுக்கு முன்னர், எமது கட்சியின் அட்டாளைச்சேனை - தைக்கா நகர் வட்டார வேட்பாளரை ஆதரித்து நடந்த கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருந்த கட்சியின் மூத்த போராளி கால்தீனை இடைநடுவில் உதுமாலெப்பை தடுத்து நிறுத்தினார்.

போர் நிறுத்தத்தை நிராகரிக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் தீவிரமடையும் நிலவரம்

போர் நிறுத்தத்தை நிராகரிக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் தீவிரமடையும் நிலவரம்

தாகாத வார்த்தை பிரயோகம் 

கால்தீன் என்பவர் எமது கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமாக இருந்து மறைந்த மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் தம்பியாவர்.

எமது கட்சிக்காக கால்தீன் பெரும் தியாகங்களைச் செய்துள்ளார். இதன் போதுதான், அந்தக் கூட்டத்தின் ஏற்பாடு தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்திய உதுமாலெப்பை, என்னை மடையன் என்று பலர் மத்தியில் கூறியதோடு, என்னை நீ என்றும் பல தடவை கூறி, கிட்டத்தட்ட என்னை தாக்குவதற்கு முயற்சித்தார்.

உதுமாலெப்பை எம்.பி கட்சியையே அழிக்கிறார் : போர்க்கொடி தூக்கும் முஸ்லிம் காங்கிரஸ் | Uthumalebbe Mp Is Destroying The Party

இதனால், அந்த இடத்தில் கலவரம் ஏற்பட்டு விடுமோ என நான் அச்சமடைந்தேன். இந்தக் கூட்டத்துக்கு சமூகமளித்திருந்த எமது கட்சியின் மூத்த உறுப்பினரும் உயர்பீட உறுப்பினருமான வாஹிட்டை, உதுமாலெப்பையுடன் வந்திருந்தவர்கள் மிக மோசமான வார்த்தைகளால் பேசினார்கள். இந்தச் சம்பவம் அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

முன்னர் கட்சிக்கு வெளியிலிருந்து எங்கள் மீது கொடூரங்களைக் கட்டவிழ்த்துவிட்ட உதுமாலெப்பை, இப்போது கட்சிக்குள் வந்தும் அதே வேலையைத்தான் செய்கிறார்.

இதனை கட்சியின் போராளிகள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

இறக்காமத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

இறக்காமத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பு அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பு அறிவிப்பு

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW