தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பு அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election Local government Election
By Dharu Apr 16, 2025 12:45 AM GMT
Dharu

Dharu

உள்ளூராட்சித்  தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த வேட்பாளர்களுக்கு அதற்காள அறிக்கைகளின் நகல்களை வழங்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரத்நாயக்க நேற்று (15) ரத்நாயக்க வெளியிட்ட சிறப்பு அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

"உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அந்தந்த அரசியல் கட்சிச் செயலாளர்கள்/அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுயாதீனக் குழுத் தலைவர்கள் மனுக்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அலுவலகங்களுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது." என கூறப்பட்டுள்ளது.


Gallery