அமெரிக்க பூங்கா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: பலர் காயம்

United States of America World Gun Shooting
By Laksi Jul 29, 2024 11:56 AM GMT
Laksi

Laksi

அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிச் சூடானது நேற்று (28) மாலை, நியூயோர்க்கின் (New York) அப்ஸ்டேட்டில் உள்ள மேப்பிள்வுட் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பலர் பலி

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பலர் பலி

துப்பாக்கிச்சூடு

இதனையடுத்து, சம்பவத்தில் 20 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதோடு ஐந்து பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க பூங்கா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: பலர் காயம் | Usa New York Park Shooting Many Injures

சுட்டுக்கொல்லப்பட்டவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள தங்கத்தின் விலை

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள தங்கத்தின் விலை

பொலிஸார் விசாரணை

இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு நடந்த போது அந்த பகுதியில் விருந்து ஒன்று நடந்ததை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்க பூங்கா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: பலர் காயம் | Usa New York Park Shooting Many Injures

மேலும், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW