காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பலர் பலி
காசா மருந்துவமனை மீது இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதலானது அல்-பாலா பகுதியில் அமைந்துள்ள மருந்துவமனை மீது இன்று (27) இடம்பெற்றுள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த கொடூரத்தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
இந்தநிலையில், கான் யூனிஸ் சிட்டி அருகேயுள்ள அபாசன் நகரில் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பானி சுஹைலா நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரால் இடம்பெயர்ந்து மத்திய கான் யூனிஸ் பகுதியில் தங்கியுள்ள பலஸ்தீன மக்களின் கூடாரங்களில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், காசாவில் இன்று இஸ்ரேல் படைகள் நிகழ்த்திய தாக்குதல்களில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |