இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Indonesia
Earthquake
World
By Laksi
இந்தோனேசியாவின் கிழக்கு மாலுகு மாகாணத்தில் இன்று (26) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
குறித்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் 170 கிலோமீட்டர் ஆழத்தில் 121 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியா ஒரு தீவு நாடாக இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |