அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மகிந்தவிற்கு அவசர கடிதம்

Mahinda Rajapaksa Prasanna Ranatunga Election
By Dhayani Jul 31, 2024 01:44 PM GMT
Dhayani

Dhayani

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மகிந்தவிற்கு அவசர கடிதம் | Urgent Letter Minister Prasanna Ranatunga Mahinda

எமது தாய்நாடு இன்று ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தருணத்தில் நாட்டை நேசிக்கும் குடிமகன் என்ற வகையில் எங்களுடைய கடமையும், பொறுப்பும் நாட்டைப் பற்றியும் எம்முடன் எப்பொழுதும் இருந்துவரும் எமது கட்சியினரைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்


கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல்

தீர்மானம் மிக்க தருணத்தை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை நேசிக்கும் ஒருவராகவே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும்,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியவுடன், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் ஒன்றினைந்து ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மகிந்தவிற்கு அவசர கடிதம் | Urgent Letter Minister Prasanna Ranatunga Mahinda

பொதுஜன பெரமுனவினால் எடுக்கப்பட்ட தீர்மானம்

பொதுஜன பெரமுனவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் பெரும்பான்மையான மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் சிந்தித்து எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. என் மனசாட்சிப்படி அந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை.

எனவே, மனசாட்சி உள்ளவர் என்ற வகையில், கட்சியின் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக என்னை அர்ப்பணிக்கிறேன்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மகிந்தவிற்கு அவசர கடிதம் | Urgent Letter Minister Prasanna Ranatunga Mahinda

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக நியமிப்பதைத் தவிர, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கு வேறு வழியில்லை.

இதன் மூலம் நான் பொதுஜன பெரமுனவை விட்டு வெளியேறுவேன் என்றோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் தஞ்சம் புகுவேன் என்றோ கூறவில்லை என்பதை வலியுறுத்துகின்றேன். நான் இன்னும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினராகவே இருக்கின்றேன். நீங்கள் இன்னும் என் ஆதர்ச தலைவர். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய சஜித்

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய சஜித்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW