ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய சஜித்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுயாதீன வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.
சஜித் சார்பாக அவரது கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட குழுவினர் இராஜகிரிய தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே, அவர்கள் இன்று (31) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றுசஜித் பிரேமதாசவிற்கான கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுக்கு (sajith premadasa) தமது ஆதரவை வழங்க உள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை: அரியநேத்திரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |