தமிழ் மக்கள் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை: அரியநேத்திரன்
தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி்த் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி அந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக 15 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றது.
அதில் இதுவரையில் பிரதான வேட்பாளர்களாக இப்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.
அதை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசர் அவர்கள் போட்டியிடுவதாக கூறப்பட்டிருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கூறப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் இப்போது மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் முடிவெடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
நான் நினைக்கின்றேன் இன்று அல்லது நாளை அவர்கள் ஒரு முடிவு எடுத்து வெளியில் அறிவிக்க வேண்டியது இருக்கின்றது.
அதில் என்னை பொருத்த அளவில் ரணில் விக்ரமசிங்கவை தான் அவர்கள் ஆதரிக்க வேண்டிய ஒரு நிலை வரும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கின்றது.
இப்போது இருக்கின்ற ஜனாதிபதி கூட மகிந்த ராஜபக்சவின் செல்ல பிள்ளையாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றார். அதில் எது வித மாற்றுக்கருத்தும் இல்லை.
கோட்டபாய ராஜபக்ச நாட்டில் இருந்து போராட்டத்தின் மூலமாக வெளியேற்றப்பட்டாலும் கூட இப்போது இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் அவர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருக்கின்றார்.” என அவர் தெரிவித்துள்ளார்.