உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்
2019 ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் இடம்பெற முக்கிய காரணம் அப்போதைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதானி பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று (21) விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத உண்மைகளை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மேலும் அவ் அறிக்கையினை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்தாமைக்கான காரணங்களையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தாக்குதல் தொடர்பான அறிக்கைகள்
2019ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அக்குழுவினால் பெறப்பட்ட அறிக்கையானது 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக கடமையாற்றிய கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த அறிக்கையானது கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்டதுடன், நாடாளுமன்ற வாசிகசாலையிலும் வைக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து செனல் 4 எனும் தொலைக்காட்சியினால் முன்வைக்கப்பட்ட 25 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ். ஐ. இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அறிக்கையொன்று கையளிக்கப்பட்டிருந்தது.
மேலும் மேற்படி அறிக்கைகளில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் விட்ட குறைபாடுகளைக் கண்டறிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. என். ஜே. டி அல்விஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அதன் அறிக்கையைக் கையளித்திருந்தது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய உதய கம்மன்பில பகிரங்கப்படுத்தியவற்றை இக் காணொளியில் பார்வையிடவும்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |