பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் விநியோகம்
இந்த ஆண்டு (2025) 10,096 அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களுக்கும் பாடசாலை சீருடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தினை கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
சீருடை துணி
இதன்படி, துணி வழங்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,640,086, மேலும் தேவையான மொத்த துணியின் அளவு 12 மில்லியன் மீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பாடசாலை மாணவர்களுக்கு அனைத்து பாடசாலை சீருடைகள் மற்றும் உபகரணங்களின் விநியோகம் நிறைவடைந்துள்ளன.
1992 முதல் அரச உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரச அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களின் மாணவ துறவிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கும் இலவச பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாடசாலை சீருடைகள்
2015 முதல் 2020 வரை சீருடைகளைப் பெறுவதற்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு, சீன மக்கள் குடியரசு தேவையான பாடசாலை சீருடைகளில் 100% ஐ நன்கொடையாக வழங்கியது, இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.5,171 மில்லியன் ஆகும்.
2023 ஆம் ஆண்டுக்கான சீருடை துணித் தேவையில் 70% சீன மக்கள் குடியரசின் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான சீருடை துணித் தேவையில் 80% அந்த அரசாங்கத்திடமிருந்து மானியமாகவும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |