கசிந்த கொலைப் பட்டியல்... பிரித்தானிய உளவாளிகளை வேட்டையாட தொடங்கியுள்ள ஈரான்

Afghanistan Iran World
By Rakshana MA Aug 18, 2025 10:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

பிரித்தானியாவின் சிறப்புப் படைகள் மற்றும் உளவாளிகள் தொடர்பில் கசிந்த தரவுகளை பயன்படுத்தி, தாலிபான்களுடன் இணைந்து பிரித்தானிய உளவாளிகளை ஈரான் வேட்டையாட தொடங்கியுள்ளது.

ஈரானின் புரட்சிகர படையின் அதிகாரிகள் குழு ஒன்று கடந்த வாரம் காபூலுக்கு சென்று, ஆப்கானிஸ்தான் நிர்வாகத்திடம் அந்த தரவுகளைப் பார்வையிட வாய்ப்பு கோரியுள்ளது.

ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில் ஈரான் இந்த விவகாரம் தொடர்பில் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இன்று ஆரம்பமாகும் பாடசாலை மூன்றாம் தவணை

இன்று ஆரம்பமாகும் பாடசாலை மூன்றாம் தவணை

சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம்

அத்துடன், கசிந்த அந்த தரவுகளைப் பயன்படுத்தி பிரித்தானியாவின் MI6 உளவாளிகளை வேட்டையாடவும் ஈரான் முடிவுக்கு வந்துள்ளது.

கசிந்த கொலைப் பட்டியல்... பிரித்தானிய உளவாளிகளை வேட்டையாட தொடங்கியுள்ள ஈரான் | Uk Spies Hunted By Iran Taliban

வெளியான தகவலின் அடிப்படையில், ஈரான் அரசாங்கத்தின் ஒப்புதல் இன்றி, புரட்சிகர படையின் அதிகாரிகள் நான்கு பேர் ஆப்கானிஸ்தான் பயணப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய உளவாளிகளைப் பிடித்து, நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் தொடர்பாக மேற்கு நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளில் அவர்களை பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இதற்கு ஈடாக, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் உத்தியோகப்பூர்வ ஆட்சியாளர்களாக ஈரானால் முறையாக அங்கீகரிக்கப்படவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தாலிபான்களால் ஒப்படைக்கப்பட்டுள்ள அந்த கொலைப்பட்டியல், பிரித்தானிய உளவாளிகளைப் பிடிக்க பயன்படுத்தப்படும் என்றே தற்போது ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் கதவடைப்பை ஏற்காமல் செயல்படும் மக்கள்

அம்பாறையில் கதவடைப்பை ஏற்காமல் செயல்படும் மக்கள்

ரகசிய தரவுகள்

ஈரானின் புரட்சிகர படையும் மிகக் கொடூரமான தாலிபான்களும் இணைந்து பிரித்தானிய உளவாளிகளை வேட்டையாடத் தொடங்கியுள்ளதாக கசிந்துள்ள தகவல் தற்போது அரசாங்க வட்டத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கசிந்த கொலைப் பட்டியல்... பிரித்தானிய உளவாளிகளை வேட்டையாட தொடங்கியுள்ள ஈரான் | Uk Spies Hunted By Iran Taliban

மட்டுமின்றி, ஆப்கான் மற்றும் பிரித்தானிய அதிகாரிகளின் அதி முக்கியத்துவம் வாய்ந்த தரவுகள் தற்போது 100,000 பேர்களை மரண அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது என்ற கலங்கடிக்கும் தகவல் கசிந்துள்ளது.

2023ல் இந்த ரகசிய தரவுகள் கசிந்த நிலையில், அரசாங்கம் அதை மூடிமறைக்க ஒரு கடுமையான நீதிமன்ற உத்தரவைப் பெற்றது.

மேலும், வெளிப்படையான நீதிக்காக இரகசிய நீதிமன்றங்களில் 23 மாத போராட்டத்தையும் தூண்டியது. இந்த நிலையில், கடந்த மாதம் மொத்த போராட்டங்களையும் கைவிட்ட பிரித்தானிய அரசாங்கம், 7 பில்லியன் பவுண்டுகள் தொகையில் ஒரு ரகசிய திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்தது.

சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்ற கிண்ணியா மாணவன்!

சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்ற கிண்ணியா மாணவன்!

ஈரானிய எல்லை படை

அத்துடன், பிரித்தானியப் படைகளுக்காக உழைத்த ஆயிரக்கணக்கான ஆப்கன் நாட்டவர்களையும் மீட்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது ஈரான் வசம் சிக்கியுள்ள அந்த கொலைப்பட்டியலில் 25,000 ஆப்கானியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

கசிந்த கொலைப் பட்டியல்... பிரித்தானிய உளவாளிகளை வேட்டையாட தொடங்கியுள்ள ஈரான் | Uk Spies Hunted By Iran Taliban

மேலும், MI6 உளவாளிகள் உட்பட பிரித்தானிய அதிகாரிகள், சிறப்புப்படை மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகள் மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளது.

இந்த தரவுகள் அனைத்தும் எதிரிகளுக்கு பொக்கிஷமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

வெளியான தகவலின் அடிப்படையில், பட்டியலில் பெயர்கள் உள்ள பல ஆப்கான் நாட்டவர்கள் சமீபத்திய நாட்களில் ஈரானிய எல்லை படைகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், பிரித்தானிய உளவாளிகளை மட்டுமே ஈரான் இலக்கு வைத்துள்ளதால், கைதான பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW