அம்பாறையில் கதவடைப்பை ஏற்காமல் செயல்படும் மக்கள்

Sri Lankan Peoples Major Hartal In Sri Lanka Eastern Province
By Rakshana MA Aug 18, 2025 06:43 AM GMT
Rakshana MA

Rakshana MA

இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று கதவடைப்பை மேற்கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த வேண்டுகோளினை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்த கதவடைப்பை அப்பகுதி முஸ்லிம் மக்கள் நிராகரித்து வழமையான செயற்பாட்டில் (18) ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள் புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கின.

இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்ற கிண்ணியா மாணவன்!

சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்ற கிண்ணியா மாணவன்!

கதவடைப்பு போராட்டம் 

இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது.

அம்பாறையில் கதவடைப்பை ஏற்காமல் செயல்படும் மக்கள் | Hartal Rejected By Eastern Muslims Today

அம்பாறையில் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர். அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது.

மேலும் வியாபார நிலையங்கள், சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள், பாமசிகள், வங்கிகள்,எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.

இன்று ஆரம்பமாகும் பாடசாலை மூன்றாம் தவணை

இன்று ஆரம்பமாகும் பாடசாலை மூன்றாம் தவணை

போராட்டம் நிராகரிப்பு

எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தது.

அம்பாறையில் கதவடைப்பை ஏற்காமல் செயல்படும் மக்கள் | Hartal Rejected By Eastern Muslims Today

மேலும், கதவடைப்பு அனுஸ்டிப்பை யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கமும் நிராகரித்த நிலையில் இன்று திங்கட்கிழமை (18) வட- கிழக்கு பூரண கதவடைப்புப் போராட்டத்தை அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் கதவடைப்பை நிராகரித்து வழமை போன்று தத்தமது அன்றாட நடவடிக்கையில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

அத்துடன், வ‌ட‌க்கு கிழ‌க்கில் கதவடைப்பு ந‌ட‌த‌்தும் த‌மிழ் கூட்ட‌மைப்பின் அழைப்புக்கு கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ள் க‌ட்டுப்ப‌ட‌கூடாது என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்திருந்தார். 

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: வெளியான அறிவிப்பு

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: வெளியான அறிவிப்பு

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery