பொது மன்னிப்பு காலத்தை அறிவித்துள்ள ஐக்கிய அரபு இராச்சியம்
ஐக்கிய அரபு இராச்சியம், இன்று ஆரம்பமாகும் செப்டெம்பர் மாதம் முதல் இரண்டு மாத பொது மன்னிப்பை அறிவித்துள்ளது
இது நாட்டில் தங்கியுள்ள காலாவதியான விசாக்களை கொண்டவர்கள்; அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பை அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதிவிட விசா வைத்திருப்பவர்கள்
ஏற்கனவே கடந்த 2022 ஒக்டோபரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டப்படி, தங்கள் விசாவைக் கடந்து நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் அல்லது குடியிருப்பாளர்களுக்கான அபராதம் ஒரு நாளைக்கு 50 திர்ஹம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்; வதிவிட விசா வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது அவர்களது விசா காலாவதியாகிவிட்டாலோ அல்லது இரத்து செய்யப்பட்டாலோ உரிய வேலையைக் கண்டுபிடித்து தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |