புத்தளத்தில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு

Sri Lanka Police Puttalam
By Mayuri Sep 01, 2024 02:11 AM GMT

புத்தளம் - நகூர் பள்ளி வீதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (31.08.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முஹம்மது ஹசன் முஹம்மது அம்ஜத் (வயது 23) எனும் இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொழில் நிமித்தம் கடன்பெற்று வெளிநாட்டுக்கு சென்றுள்ள குறித்த இளைஞர், அங்கு தொழில் கிடைக்காத நிலையில் பாரிய கடன் சுமையோடு மீண்டும் நாடு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சடலமாக மீட்பு

உயிரிழந்த இளைஞர் வீட்டின் மேல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

புத்தளத்தில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு | Dead Body Found In Puttalam

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையைக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW