இரு வேறு பகுதிகளில் மர்மமான முறையில் இருவர் உயிரிழப்பு
நாட்டின் இரு வேறு பகுதிகளில் மர்மமான முறையில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அவிசாவளை-கேகாலை பிரதான வீதியின் அரந்தர கெந்த பிரதேசத்திற்கு அருகில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை கண்டுபிடித்துள்ளதோடு, இது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் 55 வயதுடைய உடுகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை, வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
64 வயதுடைய துல்ஹிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு மரணங்களுக்குகான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், நீதவான் விசாரணைகளுக்காக சடலம் தற்போது குறித்த பகுதியிலுள்ள வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.