முட்டை - கோழி இறைச்சியின் விலை தொடர்பாக வெளியான மகிழ்ச்சி தகவல்

Sri Lankan Peoples Festival Money Egg
By Rakshana MA Dec 07, 2024 12:46 PM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் ஜனவரி மாதம் வரை முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் இருக்காது என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் அஜித் குணசேகர(Ajith Gunasekara) தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு முட்டை மற்றும் இறைச்சி தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

விலையில் மாற்றம்

எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை 1000 ரூபாவிற்கும் குறைவாக பேணுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாக அஜித் குணசேகர மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் வெளிநாட்டிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முட்டை - கோழி இறைச்சியின் விலை தொடர்பாக வெளியான மகிழ்ச்சி தகவல் | Egg And Chicken Costs Unaltered Until January

நாட்டில் கோழி இறைச்சி உற்பத்திகள் அதிகளவில் காணப்படுவதாகவும் தவிசாளர் அஜித் குணசேகர தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மரக்கறிகளின் விலை அதிகரிப்புடன், முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு பாரிய தேவை ஏற்பட்டுள்ளதாவுகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு - கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம்

வடக்கு - கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம்

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW