வடக்கு - கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம்

Sri Lanka Police Sri Lanka North Central Province Eastern Province
By Rakshana MA Dec 07, 2024 11:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பதவிகளில் பல வருடங்களாக கடமையாற்றும் அதிகாரிகளுக்கு புதிய இடமாற்றம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில், எதிர்வரும் நாட்களில் 50க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் மீட்பு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் மீட்பு


பதவிகள்

அத்துடன் பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கு பொலிஸ் நிலையத் தளபதி பதவிகள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் பரிசோதகர்களும் இடமாற்றங்களை பெறவுள்ளனர்.

இந்த நிலையில், பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்ற பின்னர் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வடக்கு - கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம் | Police Officers Transfers In Sri Laka

இதேவேளை, 5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டதோடு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளர், களப் படைத் தலைமையகத்தின் பணிப்பாளர், பொலிஸ் மருத்துவ சேவைகள் பிரிவின் பணிப்பாளர் உட்பட மூத்த விசாரணைகள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பல அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்

வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இயந்திரம்: கண் கலங்கி நின்ற வைத்தியர்கள்!

வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இயந்திரம்: கண் கலங்கி நின்ற வைத்தியர்கள்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW