சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் மீட்பு
Sri Lanka
Japan
Crime
By Laksi
சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்று சுங்க வருமான கண்காணிப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 24 மில்லியன் ரூபா பெறுமதியான டொயோட்டா ப்ரியஸ் (Toyota Prius) ரக சொகுசு கார் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சொகுசு கார் மீட்பு
ஜப்பானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கன்டெய்னரில் இருந்து இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த இரண்டு மாதங்களில் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகன உதிரிப்பாகங்கள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை (07) ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |