சுனாமி அனர்த்தத்தின் 20ஆம் ஆண்டின் நினைவு : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் 26, 2004 அன்று நடந்த பேரழிவில், 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.
20ஆம் ஆண்டு நினைவு
அந்தவகையில், தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம், பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர(Aruna Jeyasekara) தலைமையில் நாளை(26) நடைபெறவுள்ளது.
மேலும், மாவட்ட மட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |