நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம்
நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பவும் அமைதியை காக்கவும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட போது மீட்டெடுத்தவர் ரணில் விக்ரமசிங்கவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் இன்று(18) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கு ஆதரவு
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் பல போராட்டங்களுடன் வாழ்ந்து பல துன்பங்களை அனுபவித்தனர். பல தலைவர்கள் நாட்டை பொறுப்பெடுக்க துணிவில்லாமல் பொறுப்பெடுக்க மறுத்தனர். நாடு தத்தளிக்கும் போது இரு ஆண்டுகளுக்குள் நாட்டை மீட்டார்.
தமிழ் தேசியம் பேசியவர்கள் எதுவும் செய்யவில்லை. வடகிழக்கில் மக்கள் குறைவடைந்துள்ளனர். தமிழ் தேசியம் பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுடன் சில கட்சிகள் அவர்களின் சுய லாபத்திற்காக அரசியல் செய்கின்றனர்.
2002ஆம் ஆண்டில் பிரதமராக செயற்பட்ட போது அரிசி ஏற்றுமதியை செய்தவர் ரணில் விக்ரமசிங்க. உற்பத்தி துறை, பால் உற்பத்தி என பல அபிவிருத்திகளை செய்ய மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |