சீனாவிடமிருந்து கிடைக்கவுள்ள பாடசாலை சீருடைகள்! கல்வி அமைச்சு தகவல்

Sri Lanka Government of China China
By Mayuri Sep 18, 2024 12:11 PM GMT

சீன அரசாங்கம் இலங்கையிலுள்ள 4.3 மில்லியன் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளது.

இதன்படி சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள பாடசாலை சீருடைகளின் முதலாவது தொகுதியை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி பெற்றுக்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சீன அரசாங்கத்தின் உறுதி

அத்துடன் பாடசாலை சீருடைகளின் இரண்டாவது தொகுதி நவம்பர் 21ஆம் திகதியும், மூன்றாவது தொகுதி டிசம்பர் 20ஆம் திகதியும் வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து கிடைக்கவுள்ள பாடசாலை சீருடைகள்! கல்வி அமைச்சு தகவல் | Ministry Of Education Uniform For Students

மேலும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் குறித்த சீருடைகள் விநியோகிக்கப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW