அநுரவுக்கு பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்: ரிஷாட்

Puttalam Anura Kumara Dissanayaka Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 18, 2024 12:14 PM GMT
Laksi

Laksi

உடன்பிறப்புக்களை நேசிக்காத ஒரு சிலரே மாற்றம் வேண்டுமெனக் கோரி, அநுரகுமாரவுக்குப் பின்னால் அலைகின்றனர் என்றும் அடுத்த ஆபத்தை அறியாமலேயே இவர்கள் இவ்வாறு அலைந்து திரிவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புத்தளத்தில் நேற்று (17) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர், மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் தாய்மார்களின் கருவறைகளில் பயங்கரவாதம் உயிர்ப்படைவதாக நாடாளுமன்றத்தில் கூறியவர் தான் அநுரகுமார திஸாநாயக்க. ஈஸ்டர் தாக்குதல் காலங்களிலும், கொரோனா நேரங்களிலும் அனுரவின் சுயரூபத்தைக் காணமுடிந்தது.

புத்தளத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம்

புத்தளத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம்

தேசிய மக்கள் சக்தி 

முஸ்லிம்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி எடுத்த நிலைப்பாட்டை நாம் மறக்க முடியாது. ஜனாஸாக்களை எரிப்பதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல உதவியவர்கள் இவர்கள். பயங்கரவாதத்துடன் எமது இஸ்லாத்தை இணைத்துப் பேசியவர்களும் இவர்கள்தான்.

அநுரவுக்கு பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்: ரிஷாட் | Presidential Election Anura Rishad

அநுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும். சொந்தங்களை, உறவுகளைக்கூடக் கவனிக்காத, தொப்பி அணிந்த சிலரே, அநுரவுக்குப் பின்னால் வீர வசனம் பேசுகின்றனர். ரணிலுக்கு அளிக்கும் வாக்குகளை கடலில் கொட்டிவிடலாம்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்

சஜித்தின் வெற்றி

புத்தளம் மாவட்டத்துக்கும் நாங்களே பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுத்தோம். இவர்கள், இப்போது ஓட்டைப் பைகளுடனே ரணிலுடன் இணைந்துள்ளனர். வாக்காளர்கள் எம்முடனே உள்ளார்கள்.

அநுரவுக்கு பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்: ரிஷாட் | Presidential Election Anura Rishad

ஆறு தடவைகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் எதையும் செய்யவில்லை. நான்கு வருடங்களில் சஜித் பிரேமதாச செய்தவை ஏராளம். இதனால், இவரது வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. அந்த வெற்றியில் நாங்களும் பங்காளராவோம்" என்றார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசார கூட்டம்

சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசார கூட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW