ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Sri Lanka Crime Election
By Laksi Sep 18, 2024 09:05 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் 156 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கடந்த ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 17ஆம் திகதி வரை 4737ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 1,438 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 3,299 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

முறைப்பாடுகள்

இந்த காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள் | Increasing Election Complaints

இதேவேளை, இதுவரையில் தங்களது கிடைக்கப்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 4,209 முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு கண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எஞ்சிய 528 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள்..! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள்..! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

யுக்திய நடவடிக்கை : 716 சந்தேக நபர்கள் கைது !

யுக்திய நடவடிக்கை : 716 சந்தேக நபர்கள் கைது !

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW