பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 18, 2024 03:23 AM GMT
Mayuri

Mayuri

பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினரும், மாணவர்களும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.   

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

இந்த ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பின் போது அரச பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இயலச் செய்யும் வகையில் விடுமுறை வழங்குவதற்கு செயலாற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அனைது அரச பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

அதற்கமைய அரச பல்கலைக்கழகங்களின் கீழ் அடங்காத தனியார் பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவகங்களும் தமது பணியாட்குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்த வாக்கெடுப்பின் போது வாக்களிப்பதை இயலச் செய்யும் வகையில் விடுமுறை வழங்குவதற்கு செயலாற்றுமாறு கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Gallery