திருகோணமலை கப்பல்துறை கடற்றொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கை

Trincomalee Sri Lankan Peoples Eastern Province Sri Lanka Fisherman
By H. A. Roshan Aug 17, 2025 11:00 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

திருகோணமலை (Trincomalee) பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கப்பல்துறை கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்கின்ற போது இளைப்பாறுவதற்கு நிரந்தர கட்டடம் ஒன்றினை அமைத்து தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கப்பல் துறை பிரதேசத்தில் 85 கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மீன்பிடி தொழிலை முன்னெடுத்து வருகின்றனர்.

காலையில் 6:00 மணிக்கு கடலுக்கு செல்லும் பெண் கடற்றொழிலாளர்கள் மீண்டும் கரைக்கு வந்து இளைப்பாறுவதற்கு நிரந்தர கட்டடம் இல்லை எனவும் தங்களது மீன்பிடி வலைகளை பாதுகாத்து வைப்பதற்கு நிரந்தர கட்டடம் இல்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை மின்சார சபைக்கு 13.1 பில்லியன் ரூபா இழப்பு

இலங்கை மின்சார சபைக்கு 13.1 பில்லியன் ரூபா இழப்பு

முன்வைத்த கோரிக்கை

அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் பெண்கள் அதிகளவில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கப்பல் துறை கிராமத்தில் கடற்றொழிலாளர்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொடுக்க அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும்,

திருகோணமலை கப்பல்துறை கடற்றொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கை | Trinco Fishermen Demand Rest Hall

தேர்தல் காலங்களில் மாத்திரம் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக கூறிவிட்டு செல்வதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கப்பல் துறை கடற்றொழிலாளர்களின் நலன் கருதி இளைப்பாருவதற்கு நிரந்தர கட்டடம் ஒன்றினை அமைத்து தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கடற்றொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பலஸ்தீனத்தை துண்டாக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம்! பிரான்ஸ் கடும் கண்டனம்

பலஸ்தீனத்தை துண்டாக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம்! பிரான்ஸ் கடும் கண்டனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW