ஜனாதிபதித் தேர்தலுக்கான பணம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

Election Commission of Sri Lanka Ranjith Siyambalapitiya Election
By Mayuri Jul 27, 2024 05:46 AM GMT

தேர்தல் ஆணையாளர் அலுவலகம் ஏறக்குறைய 8 பில்லியன் ரூபா மதிப்பீட்டை அனுப்பியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையாளர் கோரும் பணத்தை வழங்க திறைசேரி தயார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம்

கடந்த பாதீட்டு திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பணம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு | Treasury Is Ready To Provide The Money

இந்த நிலையில் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் ஏறக்குறைய 8 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டை அனுப்பியுள்ளது.

மேலும் அச்சிடுதல், பாதுகாப்பு, எரிபொருள், வாக்குப் பெட்டிகள் போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்கும் பணத்தை வழங்க திறைசேரி தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW