இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By Rakshana MA
மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நாட்டிற்கு 97,322 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 5,90,300 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப்பயணிகள்
அதன்படி, இந்தியாவிலிருந்து 93,951 சுற்றுலாப் பயணிகளும் ரஷ்யாவிலிருந்து 77,608 சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 56,103 சுற்றுலாப் பயணிகளும் ஜேர்மனியிலிருந்து 41,366 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |