களுவாஞ்சிக்குடியில் 50 மில்லியன் நிதியில் திறக்கப்பட்ட வைத்தியசாலை அலகு
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள ஆதார வைத்தியசாலைக்கு 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் எண்டோஸ்கோப்பி அலகு ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் க.புவனேந்திரநாதன் தலைமையில் இன்று(17) இடம்பெற்றுள்ளது.
பட்டிருப்புத் தொகுதியிலுள்ள நோயாளர்கள் இதுவரைகாலமும் எண்டோஸ்கோப்பி தொடர்பான பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
50 மில்லியன் நிதி
இந்நிலையில், சுகாதார அமைச்சின் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எண்டோஸ்கோப்பி இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை நோயாளிகளுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
அத்தோடு குறித்த இயந்திரத்தின் பயன்பாடு மற்றும் நன்மைகள் தொடர்பில் வைத்தியசாலையின் தாதியினால் தெளிவூட்டப்பட்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய வைத்திய நிபுணர் எம்.பிரவின்ஸன், உயிராபத்தான நிலையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் போதும் சிறந்த உயிர்காக்கும் சேவைகளை எம்மால் மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த நிழ்வில் பொதுவைத்திய நிபுணர் எம்.பிரவின்ஸன், ஏனைய வைத்தியர்கள், தாதிய பரிபாலகர்கள், தாதி உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







