கம்பளை புகையிர நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் திட்டம்
கம்பளை ஜினராஜ மகளிர் கல்லூரி பாடசாலையின் சாரணர் பிரிவு மாணவிகளினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ், நேற்று(15) கம்பளை புகையிரநிலையத்தில் தூய்மையாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் கல்விக்காக அதிகளவிலான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.பஸ்மின்(M.S.M.Fasmin) தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புகையிரத நிலைய அபிவிருத்தி
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கம்பளை என்பது அரச நாகரீக வரலாற்றைக் கொண்டது. கம்பளைபுகையிர நிலையம் என்பது வெளிநாட்டவர்கள் அதிகம் பயன்படுத்தப்படும் இடம் ஆகும்.
நிச்சயமாக எமது அரசாங்கத்தின் மூலம் இந்த புகையிரத நிலையத்தை அபிவிருத்திசெய்வோம்.
அதற்காக உங்களுடைய ஆதரவும் பங்களிப்பும் தேவை. தற்போது இலங்கையிலுள்ள நகரங்களில் மிக அழகான நகரம் கம்பளையும் ஒன்று.
நகர சபையும் ஒரு சிறந்த சபையாகும். நகர சபையின் மூலம் நாங்கள் எதிர்காலத்தில் நிறைய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.
கிளீன்ஸ்ரீலங்கா திட்டம்
புகையிரத நிலையம் மட்டுமல்ல விசேட அம்புலுவாவ நகரம் உட்பட்ட புறநகரங்களை யாவற்றையும் கிளீன்ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் சுத்தம் செய்யவுள்ளோம்.
சிறு பிள்ளைகள் கம்பளை நகரில் ஒரு சிறு டொபித் தாள்களைக்கூடப் போட மாட்டோம் என்று தங்களை கைகளை உயர்த்தி கூறும் போது உண்மையிலேயே எதிர்காலத்தில் கம்பளை நகரை மிகவும் சிறந்த நகரமாக மாற்றியமைப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்நிகழ்வில் வைத்தியர் நிமல் ரத்நாயக மற்றும் பாடசாலை அதிபர் கம்பளை புகையிரத நிலைய மாஸ்டர் பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







