கிழக்கிலுள்ள ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு
கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விஷேட நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ் "ஊடகவியலாளர்கள் நாம் நேசத்தால் ஒன்றிணைவோம்! குரலற்றவரின் குரலாவோம்" எனும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்வில்...
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மிக்க சூழலிலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டு மக்களின் செய்திகளை சமூகப் பொறுப்போடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டு செல்லும் பல்வேறு ஊடகங்களில் பிராந்திய செய்தியாளர்களாக களப் பணியாற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலைமையை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களாக களப்பணியாற்றும் 20 தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் முதல் கட்டமாக 10 ஊடகவியலாளர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக தலா பத்தாயிரம் ரூபாய் வீதமும் சென்ற வருடம் இவ்வாறு ஊக்குவிப்புத் தொகையினை பெற்றுக்கொண்ட 10 ஊடகவியலாளர்களுக்கு 5000 ரூபாய் வீதமும் அன்பளிப்பு தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனின் உதவியுடன் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தினால் ஊக்குவிப்பு தொகைகள் வழங்கி வைக்கப்பட்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






